இறுதிப்போட்டி: சானியா - போபண்ணா தோல்வி - கண்ணீருடன் விடைபெற்றார்!

Tennis Australia
By Sumathi 1 மாதம் முன்

இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் போபண்ணா ஜோடி தோல்வியை தழுவினர்.

 ஓபன் டென்னிஸ் 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - போபண்ணா இணை, பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணையை எதிர்கொண்டது.

இறுதிப்போட்டி: சானியா - போபண்ணா தோல்வி - கண்ணீருடன் விடைபெற்றார்! | Sania Mirza And Rohan Bopanna Lost

முதல் செட்டில் இருவருமே ஆரம்ப முதலே சிறப்பாக விளையாடினர். முதல் சுற்றை போராடி பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் இணை கைப்பற்றியது. 2வது சுற்றிலும் லூயிசா ஸ்டெபானி - ரஃபேல் மாடோஸ் இணை பிரம்மாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தோல்வி

மீண்டும் அந்த சுற்றும் இறுதியில் 6-7 (2), 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் அவர்கள் வசமே சென்றது. இதனால், சானியா மிர்சா கண்ணீருடன் சர்வதேச டென்னிஸ் கிராண்டஸ்லாம் போட்டிகளுக்கு விடை கொடுத்தார்.

அவருக்கு அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி, வாழ்த்து தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் டென்னிஸ் ரசிகர்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.