3 செல்ஃபிகளுடன் ஒரு ரகசிய குறிப்பை வெளியிட்ட சானியா மிர்சா - ரசிகர்கள் சோகம்...!

Viral Photos Divorce
By Nandhini Jan 03, 2023 09:25 AM GMT
Report

3 செல்ஃபிகளுடன் ஒரு ரகசிய குறிப்பை வெளியிட்ட சானியா மிர்சாவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சானியா மிர்சா - சோயப் மாலிக்

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தம்பதிகள் தற்போது எல்லை தாண்டிய காதல் கதையை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த ஜோடி விவாகரத்து செய்துகொள்ளபோவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளதாகவும், அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் உறுதிப்பட தெரிவித்தார். இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இத்தகவலால் சானியா மிர்சாவின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்துள்ளனர்.

சானியா மிர்சா சமீபத்தில் கத்தாரில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஃபிஃபா உலகக் கோப்பையைப் பார்த்தார். தற்போது சானியா துபாயில் ஒரு புதிய டென்னிஸ் அகாடமியில் தன்னுடைய கவனம் செலுத்தி பிஸியாக இருந்து வருகிறார்.

பேச மறுத்த சோயப்

சமீபத்தில், சோயப் ஒரு நேர்காணலில் பேசுகையில், விவாகரத்து மிகவும் தனிப்பட்ட விவகாரம் என்றும், மக்கள் இதைப் பற்றி கேள்வி கேட்கக்கூடாது என்றும் கூறினார். பாகிஸ்தான் நடிகை ஆயிஷா ஓமருடன் சோயப் டேட்டிங் செய்வதாக தகவல் வெளியாயின.

sania-mirza-shoaib-malik-divorce-viral-photo

ரகசிய குறிப்பை வெளியிட்ட சானியா மிர்சா

இந்நிலையில், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா 3 செல்ஃபிகள் மற்றும் ஒரு ரகசிய குறிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

2023ம் ஆண்டு புத்தாண்டைக் கொண்டாடிய சானியா மிர்சா தனது பதிவில்,

2022க்கான நீண்ட மற்றும் ஆழமான தலைப்பு என்னிடம் இல்லை. ஆனால் என்னிடம் சில அழகான செல்ஃபிகள் உள்ளன. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சங்: 2022 நீங்கள் சில சமயங்களில் என் முட்டத்தை உதைத்தீர்கள், ஆனால் நான் இப்போது #நன்றியுள்ள #Youucanthandlethetruthஐப் பெற்றுள்ளேன்" என்று சானியா தனது 2 செல்ஃபிக்களுடன் பதிவிட்டுள்ளார். அவர் தனது மகன் இஷான் மிர்சா மாலிக்குடன் செல்ஃபி எடுத்தும் பதிவிட்டார்.

இந்த பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் சோகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.