விவாகரத்து சர்ச்சை: ஷங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா விஜய் - வைரலாகும் ஃபோட்டோஸ்!

Shankar Tamil Cinema Viral Photos Sangeetha Vijay
By Sumathi Apr 16, 2024 04:39 AM GMT
Report

ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துக்கொண்ட சங்கீதா புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 சங்கீதா விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான லியோ கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

விவாகரத்து சர்ச்சை: ஷங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா விஜய் - வைரலாகும் ஃபோட்டோஸ்! | Sangeetha Vijay In Shankar Daughter Marriage Pics

தற்போது, வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி68 GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து தளபதி 69 படத்தில் கமிட்டாகியுள்ளார். அதுதொடர்பான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், அரசியலில் தீவிரமாக களமிறங்கி தனது கட்சி பெயரான தமிழக வெற்றி கழகம் என்பதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.

இடதற்கிடையில், நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப்போவதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமணம் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பங்கேற்றனர்.

தாலியை எடுத்து கையில் கொடுத்த விஜய் - கொந்தளித்த மனைவி சங்கீதா!

தாலியை எடுத்து கையில் கொடுத்த விஜய் - கொந்தளித்த மனைவி சங்கீதா!

வைரல் ஃபோட்டோஸ்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா மற்றும் விக்ரம் என நட்சத்திர நடிகர்கள் மணமக்களை வாழ்த்தினர். கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜயுடன் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் சங்கீதா விஜய் பங்கேற்காமல் இருந்து வரும் நிலையில் சங்கர் மகளின் திருமண விழாவில் அவர் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

shankar daughter wedding

கோட் படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர் இந்த திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. இயக்குனர் அட்லீயின் மனைவி பிரியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கூட நடிகர் விஜய் மட்டுமே கலந்து கொண்டார். சங்கீதா விஜய் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.