நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி கலவரம் - 55 நாட்களுக்குப் பின் மூத்த நிர்வாகி கைது!
திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேஷ்காலி விவகாரம்
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நில அபகரிப்பில் ஈடுபட்டதாகவும்,
பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வெடித்தது.
ஷாஜகான் கைது
தொடர்ந்து, நில அபகரிப்பு குற்றச்சாட்டு வழக்கு தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் வீடு உட்பட அரை டஜன் இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
அதில், சோதனை நடத்த வந்த அமலாக்கத் துறை அதிகாரிகளை அவருடைய ஆதரவாளர்கள் தாக்கியதைத் தொடர்ந்து ஷாஜகான் தலைமறைவாக இருந்தார்.
இந்த நிலையில் சுமார் 50 நாட்களுக்கு பின்னர் போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், இன்று பாசிர்ஹாட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.