சிறுமி பாலியல் புகார் - பிரபல கிரிக்கெட் வீரர் கைது!

Cricket Sexual harassment Child Abuse Nepal
By Sumathi 1 மாதம் முன்

சந்தீப் லமிச்சானே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தீப் லமிச்சானே

நேபாளம் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் சந்தீப் லாமிச்சானே. இவர் நேபாள் கிரிக்கெட் அணிக்காக 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

சிறுமி பாலியல் புகார் - பிரபல கிரிக்கெட் வீரர் கைது! | Sandeep Lamichhane Accused Of Raping A Minor

இந்நிலையில், கடந்த மாதம் செப்டம்பர் 6ஆம் தேதி சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் நண்பர் ஒருவர் மூலம் சந்திப்பின் அறிமுகம் தமக்கு கிடைத்ததாகவும்,

பாலியல் புகார்

இதனையடுத்து ஆகஸ்ட் 21ஆம் தேதி காத்மாண்டு ஹோட்டலில் தம்மை சந்தித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து சந்தீப் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண்ணுக்கு சோதனை நடைபெற்று வருகிறது.

சிறுமி பாலியல் புகார் - பிரபல கிரிக்கெட் வீரர் கைது! | Sandeep Lamichhane Accused Of Raping A Minor

இதனையடுத்து அவருக்கு காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் சந்தீப் நேபாளத்தை விட்டு புறப்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றார். இதையடுத்து நேபாள கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து அவரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நீக்கியது.

தீவிர விசாரணை 

இது குறித்து சந்தீப் லமிச்சனே கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில், தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் பலாத்கார புகார் காரணமாக தான் மிகுந்த மன வேதனை அடைந்து உடல்நலம் குன்றி இருப்பதாக சந்தீப் லமிச்சனே தெரிவித்திருந்தார்.

மேலும் தான் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும், விரைவில் நலம் பெற்று நேபாளம் திரும்பி குற்றச்சாட்டுகளை பொய் என நிரூபிப்பேன் என்றும் கூறினார். இந்நிலையில் இன்று காலை காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். உடனடியாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.