பாலியல் ரீதியாக தூண்டும் ஆடை... புகார் அளிப்பவர்களுக்கு செக் வைத்த நீதிமன்றம்!

Sexual harassment Kerala
By Sumathi Aug 19, 2022 08:27 AM GMT
Report

பாலியல் ரீதியாக தூண்டும் ஆடை அணிந்துவிட்டு, பாலியல் புகார் கூறுபவர்களுக்கு கேரள நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

 பாலியல் புகார்

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சிவிக் சந்திரன்(74). மாற்றுத்திறனாளியான இவர் மீது, கோழிக்கோடு அருகே உள்ள கொயிலானி கடற்கரையில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் போலீஸில் பகார் அளித்துள்ளார்.

பாலியல் ரீதியாக தூண்டும் ஆடை... புகார் அளிப்பவர்களுக்கு செக் வைத்த நீதிமன்றம்! | Kerala Court Orders Sexual Harassment Case

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, கோழிக்கோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிவிக் சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுடன், தன் மீது பாலியவ் புகார் அளித்துள்ள இளம்பெண், தன் மடி மீது உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

நீதிமன்ற தீர்ப்பு

இந்த வழக்கில் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அதில் 'மனுதாரர் தனது முன் ஜாமின் மனுவுடன் இணைத்துள்ள புகைப்படத்தை பார்க்கும்போது, அவர் மீது புகார் கொடுத்திருக்கும் பெண் பாலியல் இச்சையை தூண்டும் விதத்தில் ஆபாசமாக உடையணிந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

பாலியல் ரீதியாக தூண்டும் ஆடை... புகார் அளிப்பவர்களுக்கு செக் வைத்த நீதிமன்றம்! | Kerala Court Orders Sexual Harassment Case

இந்த நிலையில் வயதான மாற்றுத்திறனாளியான மனுதாரர், தம்மை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்று பெண் புகார் தெரிவித்திருப்பது நம்பும் படியாக இல்லை.

எனவே மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கப்படுகிறது' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.