ரூ.45 கோடி மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல் - சசிகலா உறவினர் கைது

V. K. Sasikala Chennai Crime
By Sumathi Jan 07, 2023 07:24 AM GMT
Report

செம்மரக்கட்டைகள் கடத்திய வழக்கில், சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

செம்மரக்கடத்தல்

சென்னை அண்ணா நகரில், சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகன் விவேக் ஜெயராமனின் மாமனார் பாஸ்கர் வசித்து வருகிறார். பர்னிச்சர் கடை நடத்தி வரும் இவர் மீது செம்மரக் கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன.

ரூ.45 கோடி மதிப்பு செம்மரக்கட்டைகள் பறிமுதல் - சசிகலா உறவினர் கைது | Sandalwood Smuggling Sasikala Relative Arrested

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு செம்மரக் கடத்தல் தொடர்பாக ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். அதன்பிறகு ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று இரவு பாஸ்கரன் வீட்டில் இருந்து அவரை அழைத்து சென்ற மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள்,

சசிகலா உறவினர் கைது

தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு இயக்குநரகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாஸ்கரன் கைது செய்யப்பட்டார்.

அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.