திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? அல்லது முடிசூட்டும் விழாவா? - சசிகலா

Udhayanidhi Stalin Tamil nadu DMK V. K. Sasikala
By Thahir Dec 14, 2022 10:14 AM GMT
Report

திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? அல்லது முடிசூட்டும் விழாவா? என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார்.

சசிகலா விமர்சனம் 

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றது குறித்து விமர்சித்து, வி.கே.சசிகலா திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? அல்லது முடிசூட்டும் விழாவா? என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Cabinet change? Or a coronation? - Sasikala

அந்த அறிக்கையில், அதிமுக எளிய தொண்டரையும் பதவி கொடுத்து அங்கீகரிக்கும் கட்சி; நானும் இதைப் பின்பற்றித்தான் இதுநாள் வரை வந்து இருக்கிறேன்; எனவே நாங்கள்தான் உண்மையான திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள்.

அ.தி.மு.க மிக பெரிய பொலிவுடன் புதிய அவதாரம் எடுக்கும் அதை நானே முன்னின்று வழி நடத்துவேன். திமுகவினர் இன்றைக்கு அரங்கேற்றியது மந்திரிசபை மாற்றமா? அல்லது முடிசூட்டும் விழாவா? இதுதான் இந்த திராவிட மாடலின் சாதனையாக பார்க்க முடிகிறது என விமர்சித்துள்ளார்.