சனாதன சர்ச்சை பேச்சு; விசாரணைக்கு ஆஜராகாத உதயநிதி ஸ்டாலின் - மீண்டும் சம்மன் உத்தரவு!

Udhayanidhi Stalin Chennai Bengaluru
By Swetha Mar 05, 2024 05:00 AM GMT
Report

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜாராக மீண்டும் சம்மன் அனுப்பி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சை பேச்சு

சென்னையில், கலைஞர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு சனாதன ஒழிப்பு மாநாடு என்ற கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாப்களின் கலந்துகொண்டார்.

சனாதன சர்ச்சை பேச்சு; விசாரணைக்கு ஆஜராகாத உதயநிதி ஸ்டாலின் - மீண்டும் சம்மன் உத்தரவு! | Sanatana Udayanidhi Stalin Again Summoned

அப்போது உதயநிதி ஸ்டாலின், ‘‘சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும்.

அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப் பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை’’ என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவருடை சர்ச்சைக்குரிய பேச்சால் நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதை மட்டும்தான் கேட்டேன்; அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

அதை மட்டும்தான் கேட்டேன்; அப்பன் என்ற சொல் கெட்ட வார்த்தையா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

நீதிமன்றம் உத்தரவு

இதற்கு உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், பிஹார், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன. அவருக்கு எதிராக பெங்களுருவில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் பரமேஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

udhayanithi stalin

இந்த வழக்கில் அவரை நேரில் ஆஜராக கோரி நேற்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது நிலையில், நேற்று இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது  உதயநிதி ஸ்டாலினோ அல்லது அவர் தரப்பு வக்கீலோ ஆஜராகவில்லை.

இதனையடுத்து, எதிர் தரப்பில் 3 பேரின் வக்கீலும் ஆஜராகி வக்காலத்து தாக்கல் செய்தனர். நீதிபதி உதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் ஆஜராகும்படி மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளார். இந்த சம்மனை போலீஸ் இணை கமிஷனர் மூலம் உதயநிதியிடம் நேரில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.