ஷூட்டிங் ஸ்பாட்டில் தொல்லை; மனக்கஷ்டமா இருந்துச்சு - போட்டுடைத்த தனுஷ் பட நடிகை!

Dhanush Tamil Cinema Tamil Actors Tamil Actress Samyuktha
By Jiyath May 17, 2024 04:00 PM GMT
Report

தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பது குறித்து நடிகை சம்யுக்தா மேனன் பேசியுள்ளார். 

சம்யுக்தா மேனன்

களரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன். தொடர்ந்து ஜூலை காற்றே என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தில் நடித்தார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் தொல்லை; மனக்கஷ்டமா இருந்துச்சு - போட்டுடைத்த தனுஷ் பட நடிகை! | Samyuktha Menon Says Not Comfort Telugu Industry

மேலும், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சம்யுக்தா மேனன் "தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் போது மேக்கப் மீது அதிக கவனத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. மேக்கப் மற்றும் ஆடைக்கே கவனத்தை செலுத்துவதால் நடிப்பின் மீது கவனத்தை செலுத்த முடிவதில்லை என்று கூறியுள்ளார்.

அந்த நடிகர் நன்றி கெட்டவரு .. கர்ப்பமா இருக்கும்போதே அத பண்ணியும்.. நடிகை சாந்தி பகீர்!

அந்த நடிகர் நன்றி கெட்டவரு .. கர்ப்பமா இருக்கும்போதே அத பண்ணியும்.. நடிகை சாந்தி பகீர்!

மனக் கஷ்டம்

மேலும், ஒரு படத்தில் எனக்கான காட்சியில் நடிக்க வசனங்களை மனப்பாடம் செய்துக் கொண்டிருந்த நிலையில், படத்தின் டேக் சொல்லப்பட்டு நடிக்க ஆயத்தமானேன். அப்போது திடீரென காஸ்ட்யூமர் ஓடி வந்து சேலை சரியாக இல்லை என்று கூறி அதை சரி செய்ய ஆரம்பித்தார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் தொல்லை; மனக்கஷ்டமா இருந்துச்சு - போட்டுடைத்த தனுஷ் பட நடிகை! | Samyuktha Menon Says Not Comfort Telugu Industry

நடிக்க வேண்டிய காட்சியையே மறந்து போய் அவர் செய்வதை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது. இதை கேட்க சாதாரணமாக இருக்கும். ஆனால், நடிகர்களுக்கு அந்த நேரத்தில் ஏற்படும் மனக் கஷ்டம் அவர்களுக்கு மட்டும் தான் புரியும்" என்று தெரிவித்துள்ளார்.