காதலுக்கு எதிர்ப்பு... - மகளுக்கு சோற்றில் விஷம் வைத்த பெற்றோர்கள் - உஷார் படுத்திய பாட்டி - அதிர்ச்சி சம்பவம்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீரம்யா. இவர் தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருகிறார். இவருக்கும், காசிபாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
கடந்த 3 ஆண்டாக இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால், இந்த விவகாரம் ஸ்ரீரம்யா வீட்டிற்கு தெரியவரவே, இந்த காதலுக்கு கடும் எதிர்த்து வந்துள்ளனர். பெற்றோர்கள் கடுமையாக திட்டி ஸ்ரீ ரம்யாவை அடித்து உதைத்திருக்கிறார்கள். ஆனால், ஸ்ரீரம்யா தன் காதலை விடுவதாக தெரியவில்லை.
சோற்றில் விஷம் கலந்த பெற்றோர்
இதனையடுத்து, பெற்றோர்கள் ஸ்ரீரம்யாவை விஷம் வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால், சாப்பாட்டில் விஷம் வைத்து ஸ்ரீ ரம்யாவை சாப்பிட கொடுத்துள்ளனர். ஆனால், இதை அறிந்து கொண்ட வீட்டில் இருந்த பாட்டி, இந்த சாப்பாட்டை சாப்பிடாதே.... இதில் விஷம் இருக்கு என்று கூறி தடுத்து நிறுத்தியுள்ளார். பாட்டி சொன்னதை கேட்டு ஸ்ரீரம்யா அதிர்ச்சி அடைந்தார்.
பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம்
இனிமேல் இந்த வீட்டில் இருந்தால் தன்னை கொலை செய்து விடுவார்கள் என்று எண்ணி வீட்டை விட்டு ஸ்ரீரம்யா வெளியேறியுள்ளார். இதன் பின்பு, நேற்று முன்தினம் அருகில் உள்ள ஒரு கோவிலில் ஸ்ரீ ரம்யாவுக்கும், சரவணனுக்கும் திருமணம் நடந்தது.
இதை அறிந்து கொண்ட ஸ்ரீரம்யாவின் பெற்றோர் கடும் ஆத்தில் உள்ளதாக தகவல் வரவே, இவர்கள் இருவரும் இன்று மாவட்ட போலீஸ் எஸ்பி சசி மோகனிடம் பாதுகாப்பு கேட்டு நேரில் வந்து மனு கொடுத்துள்ளனர். மனுவை விசாரித்த காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.