9 வயது சிறுமி உட்பட 20 மனைவிகள் - பிடிபட்ட பாலியல் சாமியார்!
சிறுமிகள் உட்பட 20 மனைவிகளை கொண்ட சாமியார் வசமாக பிடிப்பட்டுள்ளார்.
20 மனைவிகள்
அமெரிக்கா, அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் சாமுவேல் ரேப்பிலி பேட்மேன்(46). இவர் கிறிஸ்துவ மதத்தின் அடிப்படைவாத குழு ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் தான் இறைத்தூதர் என்றும், உலக மக்களை ரட்சிக்க வந்ததாகவும் பிரபலப்படுத்தி உள்ளார்.

இதற்கு ஏராளமான பக்தர்களும் உள்ளனர். இந்நிலையில், புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ பிடியில் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக சாமுவேல் பிடிபட்டார். தொடர்ந்து விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிக்கிய சாமியார்
இவருக்கு 20 மனைவிகள் அதில் பெரும்பாலானோர் சிறுமிகள். அவர்களில் ஒருவருக்கு வயது 9. மேலும் தனது சொந்த மகளையே திருமணம் செய்ய முயன்று சிக்கியுள்ளார். தற்போது சிறுமிகள் ஆட்கடத்தலுக்கு ஆளானது மற்றும் கூட்டு பாலியல் நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்தியது ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில், சிறார் பாலியல், போதைக்கடத்தல், தீவிரவாத குழுக்கள் ஆகியவற்றோடு திடர்பு இருப்பதாக சந்தேகித்து எஃப்பிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.