ஒரே வீட்டில் 15 மனைவிகள்...107 குழந்தைகள் - காலரை தூக்கிவிடும் நபர்!

Marriage Viral Photos Kenya
By Sumathi Sep 11, 2022 01:45 PM GMT
Report

15 மனைவி, 107 குழந்தைகளுடன் ஒருவர் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்.

கென்யா நபர் 

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலலுயானா. இவர் தான் அந்நாட்டின் தற்போதைய கல்யாண ராமனாக உள்ளார். 61 வயது நிரம்பிய இவர் தற்போது வரை 15 பெண்களை திருமணம் செய்துள்ளார்.

ஒரே வீட்டில் 15 மனைவிகள்...107 குழந்தைகள் - காலரை தூக்கிவிடும் நபர்! | Man Has 15 Wives And 107 Children Live Together

இதன்மூலம் அவருக்கு மகன், மகள் என மொத்தம் 107 குழந்தைகள் உள்ளனர். இதனால் அவரது குடும்பமே குட்டி கிராமமாக மாறியுள்ளது. இதுபற்றி டேவிட் சாகாயோ கலலுயானா கூறுகையில், ‛‛எனது இந்த முடிவின் பின்னணியில் அரசர் சாலமோன் தான் உள்ளார்.

 15 மனைவிகள்

அவருக்கு மொத்தம் 700 மனைவிகளும், 300 பெண் பார்ட்னர்களும் இருந்தனர். நான் எந்த விதத்திலும் சாலமோனை விட குறைந்தவர் இல்லை. நான் பல பெண்களின் கண்களில் புத்திசாலித்தனமாக தெரிகிறேன்.

ஒரே வீட்டில் 15 மனைவிகள்...107 குழந்தைகள் - காலரை தூக்கிவிடும் நபர்! | Man Has 15 Wives And 107 Children Live Together

இதனால் தான் பல பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கி உள்ளேன். அவர்களை சமாளிக்கும் வித்தைகள் எனக்கு நன்றாக தெரியும். தற்போது ஒவ்வொருவருக்கும் தேவையான உணவை நான் கொடுத்து வருகிறேன்.

107 குழந்தைகள்

மனைவியின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தாலும் எனக்கு அது பெரிய பிரச்சனையாக இருக்காது'' என்றார். இதுபற்றி அவரது மனைவியில் ஒருவரான ஜெசிகா கூறுகையில், ‛‛என் கணவர் புதிதாக திருமணம் செய்வதை பார்த்து நான் ஒருபோதும் பொறாமை கொண்டது இல்லை.

அவர் ஒரு பொறுப்பான மனிதர். அவர் ஒரு செயலை செய்யும் முன்பு பல முறை யோசிப்பார். அவரது முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும்'' என்றார். மேலும், இன்னொரு மனைவி ரோஸ் கூறுகையில்,

‛‛நாங்கள் ஒருவரையொருவர் நேசித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். எனக்கும் டேவிட்டுக்கும் 15 குழந்தைகள் உள்ளன. நாங்கள் டேவிட்டுடன் இணைந்து வாழ பழகிவிட்டோம்'' என்றார்.