சாம்சங் நிறுவன அறிவிப்பு: உடன்பாடு இல்லை; போராட்டம் தொடரும் - சிஐடியு
சாம்சங் தொழிலாளிகள் போராட்டம் தொடரும் என சிஐடியூ தொழிற்சங்கம் கூறியுள்ளது.
சாம்சங் தொழிலாளிகள்
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள சிப்காட்டில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் உள்ளது. இங்கு ல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
சுமார் 1800 பேர் நிரந்தர தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், தொழிற்சாலையில் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் பயனில்லை.
சிஐடியூ திட்டவட்டம்
தொடர்ந்து அமைச்சர்கள் தா.மோ. அன்பரன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில், சிஐடியு மற்றும் தொழிலாளர்களுடன் 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தொழிலாளர்களின் கோரிக்கையான ஊதிய உயர்வு உள்ளிட்ட 14 கோரிக்கைகளை நிறைவேற்ற சாம்சங்நிறுவனம் ஒப்புகொண்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான, தொழிற்சங்க அங்கீகராம் குறித்த கேள்விக்கு, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்றம் கூறுவதை ஏற்போம் என அமைச்சர் தா. மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். ஆனால், சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் முத்துக்குமார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்புகள் பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எதிரானது. போராட்டத்தின் உண்மை நிலையை திசைத் திருப்பும் செயல்.
தொழிலாளர்கள் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார்.