சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்..என்ன நடக்கிறது? துணை முதல்வர் உதயநிதி பதில்!
போராட்டம் குறித்து துணை முதல்வர் உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
போராட்டம்..
சாம்சங் தொழிலாளிகள் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ள சிப்காட்டில் 'சாம்சங் இந்தியா' நிறுவனம் உள்ளது. இங்கு ல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 1800 பேர் நிரந்தர தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், தொழிற்சாலையில் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் தீவிரமடைந்தது. சிஐடியூ தொழிலாளர் யூனியன் அமைக்க அனுமதி தரும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் போலீசாரை தள்ளிவிட்டதாகச் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், பலர் நேற்று காலை கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி உண்டு எனக் குறிப்பிட்ட நீதிபதி,
உதயநிதி பதில்
அவர்களைச் சிறையில் அடைக்க மறுத்ததால் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சூழலில் சாம்சங் ஊழியர்கள் போராட்டம் குறித்து துணை முதல்வர் உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், "சாம்சங் நிறுவனம் என்பது பல நாடுகளில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனம்.
அவர்களுக்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன. பன்னாட்டு நிறுவனம் என்பதால் அரசியல் இயக்கம் சார்ந்த தொழிற்சங்கத்திற்கு அனுமதி இல்லை என்று அவர்கள் தரப்பில் கூறுகிறார்கள். தொழிலாளர்கள் முன்வைத்த ஒரு கோரிக்கையைத் தவிர அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத்தில் அரசியல் சார்ந்து எதுவும் இருக்கக் கூடாது என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த ஒரு கோரிக்கை மட்டும் ஏற்கப்படவில்லை.. தொழிலாளர்களின்
இந்த ஒரு கோரிக்கையைத் தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது" என்று குறிப்பிட்டார்.