முதல்வரின் சமோசாவை சாப்பிட்ட பாதுகாப்பு ஊழியர்கள் - CID விசாரணை நடத்த உத்தரவு!
முதலமைச்சரின் வருகையையொட்டி இமாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு வீரர்களுக்கு சமோசா வழங்கப்பட்டுள்ளது.
இமாச்சல் அரசு
இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த அக்., 21 ஆம் தேதி சி.ஐ.டி., அலுவலகத்தில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பங்கேற்பதற்காக அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு சென்றுள்ளார்.
அப்போது முதலமைச்சரின் வருகையை ஒட்டி வருகைக்காக ஹோட்டலில் இருந்து சமோசா , ஐஸ்கீரிம் உள்ளிட்ட சில உணவுப் பொருட்கள் 4 பெட்டிகளில் வரவழைக்கப்பட்டனர். ஆனால் சமோசா , ஐஸ்கீரிமை முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு வழங்காமல் அவரது பாதுகாப்பு வீரர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இமாச்சல் அரசு சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.தற்பொழுதின் இந்த செயல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் சர்மா கூறுகையில் மாநிலத்தின் வளர்ச்சியைப் பற்றி மாநில அரசுக்கு அக்கறை இல்லை .
சமோசா
அதன் ஒரே கவலை ‘முதலமைச்சரின் சமோசாவை பாதுகாப்பு வீரர்களுக்குக் கொடுத்தது தான் கவலை என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இந்த சம்பவம் ஹிமாச்சல பிரதேசத்தின் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமீபகாலமாக இமாச்சலப்பிரதேச முதல்வராக உள்ள சுக்விந்தர் சிங் சுகு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். தற்போதைய ஆட்சிக் காலத்தில் அளித்த முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காகவும், தவறான நிர்வாகத்திற்காகவும் விமர்சனங்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.