சமோசாவால் பறிபோன வேலை; இளைஞரை விடாத வியாபாரி - வைரலாகும் வீடியோ

Viral Video Madhya Pradesh
By Sumathi Oct 21, 2025 04:48 PM GMT
Report

சமோசா வியாபாரி இளைஞரிடம் அடாவடி செய்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

வியாபாரி அடாவடி

மத்திய பிரதேசம், ஜபால்பூர் ரயில் நிலைய பிளாட்பார்மில் சமோசா கடை வைத்திருப்பவர் சந்தீப் குப்தா. ரயில்வேயின் அனுமதி பெற்று உரிய உரிமம் பெற்று அந்த கடையை நடத்தி வருகிறார்.

madhya pradesh

இந்நிலையில் ஸ்டேஷனில் வந்திறங்கிய ரயிலில் இருந்து இளைஞர் ஒருவர் இறங்கினார். சந்தீப்பிடம் சமோசா வாங்கிவிட்டு போன்-பே மூலமாக பணம் செலுத்த முயன்றார். ஆனால் போன்-பேயில் இருந்து பணம் செல்லவில்லை.

மனைவியுடன் அப்பாவுக்கு தகாத உறவு - மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட ஷாக் வீடியோ!

மனைவியுடன் அப்பாவுக்கு தகாத உறவு - மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட ஷாக் வீடியோ!

அதிரடி நடவடிக்கை

அப்போது ரயில் புறப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர், சந்தீப் குப்தாவிடம் அடுத்து வரும்போது தருகிறேன் என்றார். ஆனால் அவரை விடாத சந்தீப் காலரை பிடித்து இழுத்து பணம் தந்துவிட்டு செல்லும்படி கூறினார். உடனே இளைஞர் தனது கையில் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்ச்சை கழற்றி கொடுத்தார்.

வாட்ச் விலை அதிகம் என்பதால் கூடுதலாக 2 சமோசாக்களை இளைஞருக்கு சந்தீப் குப்தா வழங்கினார். பின் இளைஞர் அங்கிருந்து சென்றார்.

இதுகுறித்த வீடியோ பரவிய நிலையில், சந்தீப் குப்தா கைது செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி ரயில்வே ஸ்டேஷனில் அவர் சமோசா விற்க வழங்கப்பட்ட லைசென்சும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.