உமிழ்நீரால் வெள்ளரிக்காயை சுத்தம் செய்த வியாபாரி - அதிர்ச்சி வீடியோ!
வியாபாரி ஒருவர் உமிழ்நீரால் வெள்ளரிக்காயை சுத்தம் செய்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வியாபாரியின் செயல்
தெருவோர வியாபாரி ஒருவர் வெள்ளரிக்காய்களை விற்பனை செய்வதற்கு முன்பு அவற்றை தனது வாயில் வைத்து உமிழ்நீரால் நனைத்த காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் அந்த வீடியோவில் கடற்கரையில் இரு இளைஞர்கள் வெள்ளரிக்காய் விற்கின்றனர். ஒருவர் ஸ்டூலில் அமர்ந்திருக்க மற்றொருவர் அருகில் நிற்கிறார்.
அதிர்ச்சி வீடியோ
அவர்களில் நின்று கொண்டிருந்த இளைஞர், ஒரு வெள்ளரிக்காயை எடுத்து வாயில் வைத்து சிறிது நேரம் அதை உறிஞ்சி, பின்னர் கைகளில் உமிழ்நீரைத் தேய்த்து பின் ஒரு கூடையில் அதை விற்பனைக்கு அடுக்கி வைத்துள்ளார்.
தொடர்ந்து, கூடையிலிருந்து மற்றொரு வெள்ளரிக்காயை எடுத்து வெட்டி அதையும் விற்பனைக்கு வைக்கிறார். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது இன்னும் தெரியவரவில்லை. இந்த வீடியோ, 6 லட்சம் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது.