தோனி சொன்ன அந்த ஒரு விஷயம்தான் - வெளிப்படையாக பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர்!

MS Dhoni Chennai Super Kings Indian Cricket Team
By Swetha Dec 23, 2024 11:00 AM GMT
Report

சிஎஸ்கேவின் முன்னாள் வீரரான சமீர் ரிஸ்வி தோனி கொடுத்த அட்வைஸ் குறித்து பேசியுள்ளார்.

சிஎஸ்கே வீரர்

ஜராத்தில் உள்ள வதோதராவில் தற்போது 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஸ்டேட் ஏ கோப்பைக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சமீர் ரிஸ்வி 97 பந்துகளில் 201 ரன்கள் அடித்து குவித்துள்ளார்.

தோனி சொன்ன அந்த ஒரு விஷயம்தான் - வெளிப்படையாக பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர்! | Sameer Rizvi Opens Up About Dhonis Advice To Him

கடந்த சனிக்கிழமை நடந்த திரிபுரா - உத்தர பிரதேசம் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் டாஸ் வென்ற திரிபுரா அணி பவுலிங் செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய உத்தர பிரதேச பேட்ஸ்மேன்கள், தங்கள் அதிரடி ஆட்டத்தால் ஸ்கோரை உயர்த்தினர்.

அப்போது களமிறங்கிய சமீர் ரிஸ்வி, 13 பவுண்டரிகள், 20 சிக்சர்கள் என 97 பந்துகளில் 201 ரன்களை குவித்து அசத்தினர். இதனால் உத்தரபிரதேச அணி 50 ஓவர்களின் முடிவில் 405 ரன்களை எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய திரிபுரா அணியால் 50 ஓவர்களில் 253 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இது குறித்து பேசிய சமீர் ரிஸ்வி, “எனது சிறுவயது ஹீரோவுடன் அறையை பகிர்ந்துகொண்டுள்ளேன். அதற்கு கடவுளுக்கு எப்போதும் நன்றி சொல்லுவேன். மாஹி சாரிடம் நான் நிறைய கற்றுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால்,

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் - பிரச்சாரத்தில் இறங்க உள்ள தோனி

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் - பிரச்சாரத்தில் இறங்க உள்ள தோனி

தோனி

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரிடம் சென்று பேசுவேன். வலைப்பயிற்சியில் அவர் ஈடுபடும்போது அவரைக் கவனிப்பேன். அவர் நிதானமாக இருக்கக்கூடியவர். பவுலர் யாரென்று அவர் பார்க்க மாட்டார். வலைப்பயிற்சியின்போது நான் அவருடன் நிறைய பேசியுள்ளேன்.

தோனி சொன்ன அந்த ஒரு விஷயம்தான் - வெளிப்படையாக பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர்! | Sameer Rizvi Opens Up About Dhonis Advice To Him

அப்போது அவர் என்னுடைய மனநிலை குறித்தும், ஆட்டத்தை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது குறித்தும் பேசினார்.அனைவரையும் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். ஆனால் மற்றவர்களிடமிருந்து நீங்கள் தனியாகத் தெரியவேண்டுமானால், உங்கள் மனநிலை முக்கியம்.

அனைத்து இடத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும். 1 பந்தில் 6 ரன்கள் எடுக்க வேண்டுமானாலும், 6 பந்துகளில் 1 ரன் எடுக்க வேண்டுமானாலும், ஒன்றுபோல இருக்க வேண்டும். நிதானமாக, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க வேண்டும்.

தோல்வியைப் பற்றிக் கவலைப்பட்டால், உடனடியாக நீங்கள் கவனத்தை இழப்பீர்கள். வெற்றியும் தோல்வியும் கிரிக்கெட்டில் சாதாரணமான ஒன்றுதான். அதனால் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், உங்களை நம்புங்கள்” என தோனி கூறியதாகத் தெரிவித்திருந்தார்.