குஷி தோல்வி..!! இது வேலைக்கு ஆகாது..! புஷ்பா ரூட்டில் சமந்தா..??
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில் நடிகை சமந்தா மீண்டும் ஒரு பாடலுக்கு ஆடவுள்ளார் என்ற செய்தி தீயாய் பரவி வருகின்றது.
சமந்தா
நாயகியாக மிக பெரிய உச்சத்தில் உள்ள சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆடிய நடனம் தற்போது வரை பேசும் பொருளாக இருந்து வருகின்றது.
படத்தின் வெற்றிக்கே இந்த பாடல் மிக பெரிய காரணம் என பலரும் தற்போதும் விவாதங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.
மீண்டும் சாம்..!
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் இந்த படத்திலும், ஊ சொல்றியா மாமா என்ற பாடல் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலிலும் மீண்டும் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
முதல் பாடல் சமந்தாவிற்கு பெரும் வரவேற்பை கொடுத்த நிலையில், தான் படக்குழு மீண்டும் அவரை அணுகியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால், இது குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குஷி படத்திற்கு பிறகு சமந்தா ஓய்வில் உள்ளார்.