நான் இன்னும் இறக்கல.. கண்ணீர் விட்டு தேம்பி அழுத சமந்தா!

Samantha Tamil Cinema Viral Video Indian Actress
By Sumathi Nov 08, 2022 09:15 AM GMT
Report

நேர்க்காணல் ஒன்றில் சமந்தா கண்னீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமந்தா

தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது.

நான் இன்னும் இறக்கல.. கண்ணீர் விட்டு தேம்பி அழுத சமந்தா! | Samantha Talking About Her Health Condition

அதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன். இது சீக்கிரம் சரியானதும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்தார்.

உடல்நிலை

இந்நிலையில், தனது தெலுங்கு படமான யசோதா வெளியீட்டிற்கு தயாராகி கொண்டிருக்கிறார். அப்போது நேர்க்காணல் ஒன்றில், தனது உடல்நிலை குறித்து மனம் திறந்துள்ளார். அதில், “நான் எனது பதிவில் கூறியது போல், சில நாட்கள் நல்லதாக இருக்கும், சில நாட்கள் கெட்டதாக இருக்கும்.

சில நாட்களில், ஒரு அடி எடுத்து வைப்பது கூட கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் நான் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என ஆச்சரியப்படுகிறேன். நான் இங்கே போராட வந்திருக்கிறேன்.

 வருத்தம்

நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது நிலைமை உயிருக்கு ஆபத்தானது என்று விளக்கும் பல கட்டுரைகளை நான் பார்த்தேன். இப்போது என்னுடைய நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல. நான் இன்னும் இறக்கவில்லை.

அந்த தலைப்புச் செய்திகள் மிகவும் அவசியமானவை என்று தோன்றவில்லை” எனக் குறிப்பிட்டு கண் கலங்கினார். தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.