மீண்டும் இணைந்து வாழப்போகும் சமந்தா - நாகசைதன்யா? குஷியில் ரசிகர்கள்!
ஆட்டோ இம்யூன் எனும் தோல் நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்திருந்தார்.
நோய் பாதிப்பு
தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. தற்போது பாலிவுட்டிலும் வலம் வர உள்ளார். இந்நிலையி, இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன். இது சீக்கிரம் சரியானதும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்தார்.
மீண்டும் இணையும் வாய்ப்பு?
அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் சமந்தாவிற்கு பல திரையுலகினர், ரசிகர்கள் அவருக்கு ஆறுதலை தெரிவித்து வந்தனர். மேலும், சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் சகோதரர் அகிலும் விரைவில் நலம்பெற வேண்டும் என ஆறுதல் கூறியிருந்தார்.
இந்நிலையில், நாக சைதன்யாவும், மருத்துவமனையில் சமந்தாவை நேரில் சென்று பார்த்ததாகவும், அவரை போனின் தொடர்புகொண்டு பேசியதாகவும் தகவல் வெளியாகிய வண்ணம் இருந்தது. மேலும் மனம் திறந்து பேசிக்கொண்ட இருவரும் தங்களது விவகாரத்தை கைவிடலாம் எனவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.