இந்த மாதிரி கேள்வி கேட்பதை நிறுத்துங்கள் - ஆவேசமான சமந்தா

Samantha Instagram Tamil Actress
By Karthikraja Nov 06, 2024 12:00 PM GMT
Report

 உடல் எடை குறித்து கேட்ட ரசிகருக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.

சமந்தா

பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

samantha

உடல் நலக்குறைவால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த சமந்தா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.

கடந்த காலத்தில் சில தவறுகள் செய்துள்ளேன்; அது உண்மைதான் - மனம் திறந்த சமந்தா

கடந்த காலத்தில் சில தவறுகள் செய்துள்ளேன்; அது உண்மைதான் - மனம் திறந்த சமந்தா

உடல் எடை

தற்போது அவர் நடித்துள்ள ‘சிட்டாடல் ஹனி பனி’(Citadel: Honey Bunny) என்ற வெப் சீரிஸில் நவம்பர் 7 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து லைவ்வில் உரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் கொஞ்சம் உடல் எடையை அதிகரிக்குமாறு கூறினார். அதற்குப் பதிலளித்த நடிகை சமந்தா, "எனது எடை குறித்து மற்றொரு கருத்து... என்னுடைய எடை குறித்து ஒரு முழு த்ரெட் பதிவையே நான் பார்த்தேன். நான் ஒரு கடுமையான அழற்சி எதிர்ப்பு டயட் முறையை பின்பற்றுகிறேன் என நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  

samantha angry fan comment

இது எனது உடலுக்குத் தேவை. இதுதான் எனது உடலை அதிக எடையிலிருந்து தடுத்து, எனது உடல் நலனுக்கு ஏற்றவாறு சரியான அளவில் என்னை வைத்திருக்க உதவுகிறது. தயவுசெய்து மனிதர்களை உடலை வைத்து மதிப்பிடும் கண்ணோட்டத்தை நிறுத்துங்கள். 2024-க்கு வந்துவிட்டோம் நாம். இன்னும் இதுபோல செய்வது சரியல்ல. வாழு, வாழ விடு.. என்பதைப்போல வாழுவோம் (Live and Let Live)" என்று கூறியிருக்கிறார்.