தீவிர தோல் சிகிச்சை? 3 மாதங்களுக்குப்பின் முகத்தை மறைத்து... சமந்தா!
மூன்று மாதங்களுக்குப்பின் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சமந்தா செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
சமந்தா
நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்துக்கு பின் கேரியரில் படு பிசியாக இருந்து வந்தார். புஷ்பா பட பாடலுக்கு பின் பட்டி தொட்டியெங்கும் ஜொலிக்க தொடங்கினார் என்றே கூறலாம். தற்போது, அவர் நடித்துள்ள யசோதா மற்றும் ஷகுந்தலம் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.
இதற்கிடையே சமந்தா அரிதான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதனால்தான் அவர் தன்னுடைய புகைப்படம் எதையும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
செல்பி புகைப்படம்
ஆனால் அதில் உண்மையில்லை என்று சமந்தாவின் குழு அப்போதே தெளிவுபடுத்தியது. சமீபத்தில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சமந்தாவின் மேலாளர் மகேந்திரா, அவர் முற்றிலும் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு எந்த உடல்நிலை பிரச்னையும் இல்லை என்றும் கூறினார்.
இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வரது முகம் முழுவதும் தெரியவில்லை என்றாலும் அவர் தன்னுடைய டிசர்ட் வாசகத்தை குறிப்பிட்டே போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதில் YOU’LL NEVER WALK ALONE எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.