தமிழ் படங்களை தவிர்ப்பதற்கு காரணம் இதுதான் - சமந்தா ஓபன் டாக்
தமிழ் படங்களில் நடிக்காதது குறித்து நடிகை சமந்தா விளக்கமளித்துள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு சினிமாக்களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் 'சிடாடல்- ஹனி பன்னி' வெப்தொடர் வெளியானது.
தமிழில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் வெளியானது. அதன் பிறகு தமிழ் படங்களில் தலை காட்டவே இல்லை.
நல்ல கதை
தற்போது 'ரக்த் பிரம்மாண்ட்: தி ப்ளடி கிங்டம்' என்ற மற்றொரு வெப் தொடரில் நடித்து வருகிறார். தற்போது ஏன் தமிழ் படங்களில் நடிப்பதில்லை என நடிகை சமந்தாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "பல படங்களில் நடிப்பது சுலபமான விஷயம்தான். ஆனால் நான் எந்த படத்தில் நடித்தாலும் அது எனது கடைசி படம் போல நல்ல படமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
படம் பார்ப்பவர்களிடமும் அதே போல ஒரு தாக்கத்தை அந்த படம் உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். அதனால் 100% ஒரு படத்தின் கதையை நான் நம்பவில்லை என்றால் அதில் நடிக்க கூடாது என முடிவு செய்துள்ளேன். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்" என பேசினார்.