அவ்வளவுதான்; புஷ்பா 2க்கு நோ சொன்ன சமந்தா - இதுதான் காரணமா!
புஷ்பா 2க்கு சமந்தா நோ சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா
தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்பின், அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியது சென்சேஷ்னல் ஆனது. அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் வைரலானது. இந்நிலையில், சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
புஷ்பா 2?
இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது. அதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன் என அதிர்ச்சி தகவலை பகிர்ந்தார்.
அதன் பின் நோயோடு போராடி பல நிலைகளை கடந்தார். தற்போது சற்று குணமாகிய நிலையில் வொர்க் அவுட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் சமந்தாவை ஒரு பாடலுக்கு ஆட படக்குழு அனுகிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.