சமந்தா அப்பல்லோவில் அனுமதி? உடல்நிலை மோசம்!

Samantha Indian Actress
By Sumathi 2 வாரங்கள் முன்
155 Shares

சமந்தா உடல்நிலை காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தா

தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது.

சமந்தா அப்பல்லோவில் அனுமதி? உடல்நிலை மோசம்! | Samantha Admitted In Apollo Hospital

அதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன். இது சீக்கிரம் சரியானதும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்தார்.

உடல்நிலை மோசம்

சமீபத்தில் நேர்கானல் ஒன்றில், சில நாட்களில், ஒரு அடி எடுத்து வைப்பது கூட கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் நான் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என ஆச்சரியப்படுகிறேன். நான் இங்கே போராட வந்திருக்கிறேன் என வேதனை தெரிவித்திருந்தார்.

சமந்தா அப்பல்லோவில் அனுமதி? உடல்நிலை மோசம்! | Samantha Admitted In Apollo Hospital

இந்நிலையில், சமந்தாவிற்கு மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. இருப்பினும் சமந்தா தரப்பில் இருந்து இதுகுறித்த எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும் அவரது ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.