சாப்பாட்டை விட காமம்தான் முக்கியம்; சமந்தா ஓபன்டாக் - தீயாய் பரவும் வீடியோ
சமந்தா பேசியுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சமந்தா
தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். பிஸியான நடிப்பிற்கு இடையில் புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்தும் ஒதுங்கி இருந்தார்.
இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.
உணவா? காமமா?
சமீபத்தில் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த சமந்தா சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது பழைய இன்டர்வியூ வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், உங்களுக்கு சாப்பாடு முக்கியமா இல்லை காமம் முக்கியமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எனக்கு காமம்தான் முக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.