யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை - லீக்கான புகைப்படம்!! சமந்தா பதிலடி
நடிகை சமந்தாவின் Morphing புகைப்படம் வெளியாகி பெரும் வைரலானது.
சமந்தா புகைப்படம்
சில நாட்கள் முன்பு நடிகை சமந்தாவின் Morphed செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்தே வெளியானது. சில நேரத்தில் அது டெலீட் செய்யப்பட்டது.
இருப்பினும் அப்படம், சமூகவலைத்தளத்தில் பரவியது. பலரும் சமந்தா குறித்து கடும் விமர்சனங்களை வைத்தனர். கூடவே சிலர், இது Morphed செய்யப்பட்ட புகைப்படம் என விளக்கம்கொடுத்தபோதும், அதனை ஏற்காமல் தொடர் விமர்சனங்கள் வெளியாகின.
பதில்
பலரும் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், சமந்தா இது போன்ற விஷயங்களில் ஈடுபடுவதாகவும் கருத்துக்களை பரப்பினார்கள். ஆனால், இன்று உண்மையான புகைப்படம் வெளியாகி அனைவரும் அமைதியாக்கியது.
இச்சூழலில், இது குறித்து சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், "நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை" என்று லீக்கான புகைப்படத்திற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்து இருக்கிறார்.
Adult - Film ஸ்டாரான வீனஸ் வலென்சியா (Venus Valencia) வின் படத்தை மர்மநபர்கள் எடுத்து, அதை பகிர்ந்து கொள்வதற்கு முன், முகத்தை கத்தரித்து சிவப்பு நிறத்தில் டோனிங் செய்திருப்பது வெளிவருகிறது. ஆனால், சமந்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் இதனை யார் வெளியிட்டது என்பது இன்னும் தெரியவில்லை. இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், பலரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.