மற்ற எல்லாம் ஓகே; அதை மட்டும் அனுமதிக்க மாட்டேன் - நாகசைதன்யா திருமணம் குறித்து பேசிய சமந்தா
பொறாமைதான் மோசமான விஷயங்களுக்கு ஆணிவேர் என சமந்தா கூறியுள்ளார்.
சமந்தா
பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தன்னுடன் நடித்து வந்த நாகசைதன்யாவுடன் சமந்தா காதலில் இருந்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
நாகசைதன்யா திருமணம்
2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். சமந்தா உடனான விவகாரத்திற்கு பிறகு, நாகசைதன்யா, சக நடிகை சோபிதா தூலிபாவை கடந்த ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தா வேறு திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் சமந்தாவிடம் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். உங்கள் முன்னாள் துணைவர் உங்களை விட்டு பிரிந்து புதிய வாழ்க்கை பயணத்தை தொடங்கியதற்கு நீங்கள் பொறாமைப்பட்டுள்ளீர்களா?’ என கேட்கப்பட்டது.
பொறாமை
இதற்கு பதிலளித்த அவர், "நான் எப்போதும் விலகி இருக்கும் ஒரு விஷயம் என்றால் அது பொறாமைதான். அது என்னிடம் இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். பொறாமைதான் எல்லா மோசமான விஷயங்களுக்கும் ஆணிவேர் என நினைக்கிறேன். மற்ற எல்லா விஷயங்களும் ஓகே தான். ஆனால் பொறாமை மாதிரியான எந்த குணத்தையும் அனுமதிக்க கூடாது. அது ஆரோக்கியமானது இல்லை" என பேசினார்.
மேலும், "திருமணம் மற்றும் குழந்தைகள் பெற்றுக் கொள்வது மட்டுமே பெண்ணின் முழுமைக்கு அர்த்தம் என்று இந்த சமூகம் கட்டமைத்துள்ளது. என் வயதில் இருப்பவர்கள் அதை செய்திருக்கவிலை என்றால் நான் சோகமான மற்றும் தனிமையான வாழ்க்கையை வாழ்வதாக எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் அது மிகப்பெரிய தவறு. அதில் எந்த உண்மையும் இல்லை. தனிமையிலும் மகிழ்ச்சி சாத்தியம்தான் என கூறியுள்ளார்.