அந்த விஷயம் செய்ய வயது தடையல்ல.. தாயாகனும்னு ஆசையாக உள்ளது - சமந்தா ஒபன்டாக்!

Swetha
in பிரபலங்கள்Report this article
அம்மாவாக வேண்டும் என்ற கனவு தனக்கு இருப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தா
பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதோடு 'மயோசிட்டிஸ்' என்ற நோய்க்கான சிகிச்சையிலும் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது ‘சிட்டாடல் ஹனி பனி’(Citadel: Honey Bunny) என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.கடந்த வாரம் அந்த வெப் சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த தொடரின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமந்தா கூறும்போது,
தயாகனும்..
அம்மாவாக வேண்டும் என்ற கனவு தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, ஒரு பெண் தாயாவது ஒரு அழகான அனுபவம். அதை நான் எதிர்நோக்கி இருக்கிறேன். பெரும்பாலான பெண்கள் வயதை பற்றி கவலைப்படுகிறார்கள்.
என்னை பொறுத்தவரை குழந்தை பெற்றெடுக்க வயது ஒரு தடையில்லை. எப்போது வேண்டுமானாலும் ஒரு பெண் தாயாகலாம் என்று தெரிவித்துள்ளார்