தீவிர நோய் பாதிப்பு: சினிமா விட்டு வெளியேற சமந்தா முடிவு - ரசிகர்கள் அதிர்ச்சி!
சினிமாவை விட்டு வெளியேற சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா
தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது. அதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன். இது சீக்கிரம் சரியானதும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்தார்.
ஓய்வு
அதன் பின் அவர் வீட்டில் ஆயுர்வேத சிகிச்சையில் இருந்தார். தற்போது மேல் சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல உள்ளார். இந்நிலையில் நோயின் தீவிரத்தால் படங்களில்

தற்போது நடிக்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. மேலும், குஷி படத்தினை முடித்து விட்டு நீண்ட ஓய்வு எடுக்க உள்ளாராம்..
இரண்டாவது சுற்று அமைதிப்பேச்சு முயற்சி தோல்வி : பாகிஸ்தானுக்கான அமெரிக்க குழுவின் பயணம் இரத்து IBC Tamil