பணம், புகழுக்கு அலையமாட்டேன்.. இதுதான் முக்கியம் - சமந்தா உருக்கம்!

Samantha Tamil Cinema
By Sumathi Dec 19, 2022 07:30 PM GMT
Report

பணம், பெயர், புகழுக்காக அலையமாட்டேன் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

 சமந்தா 

தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது.

பணம், புகழுக்கு அலையமாட்டேன்.. இதுதான் முக்கியம் - சமந்தா உருக்கம்! | Money Is Not Important Samantha

அதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன். இது சீக்கிரம் சரியானதும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்தார்.

 உருக்கம்

அதன் பின் அவர் வீட்டில் ஆயுர்வேத சிகிச்சையில் இருந்தார். தற்போது மேல் சிகிச்சைக்காக தென் கொரியா செல்லவிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு பணம், பெயர் முக்கியம் இல்லை புகழுக்காக என்றும் அலையமாட்டேன். பணத்தை விட எனக்கு நடிப்பு தான் முக்கியம்.

பணம், புகழுக்கு அலையமாட்டேன்.. இதுதான் முக்கியம் - சமந்தா உருக்கம்! | Money Is Not Important Samantha

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேசித்து நடிக்கிறேன். எனக்கு நானே விமர்சகர் என்னுடைய தவறை நானே விமர்சனம் செய்து கொள்கிறேன் எனக்கு கோபம் வரும் போதெல்லாம் ஜிம்முக்கு சென்று கண்டபடி உடற்பயிற்சி செய்வேன், அப்போது தான் என் கோவம் தணியும், நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.