உடல்நிலை மோசம்: உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் சமந்தா!
உயர்சிகிச்சைக்காக நடிகை சமந்தா தென் கொரியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா
தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது.

அதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன். இது சீக்கிரம் சரியானதும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் என அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்தார்.
உயர்சிகிச்சை
சமீபத்தில் நேர்கானல் ஒன்றில், சில நாட்களில், ஒரு அடி எடுத்து வைப்பது கூட கடினமாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் நான் இப்போது திரும்பிப் பார்க்கும்போது, இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன் என ஆச்சரியப்படுகிறேன். நான் இங்கே போராட வந்திருக்கிறேன் என வேதனை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தனது வீட்டில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது, உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    