சிகிச்சைக்கு பணமில்லாமல் கோடியில் கடன் வாங்கிய சமந்தா, அவ்வளவு மோசமான நிலைமையா? - ரசிகர்கள் ஷாக்!

Samantha Tamil Cinema Tamil Actress
By Vinothini Aug 04, 2023 07:56 AM GMT
Report

நடிகை சமந்தா தனது சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கடன் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகை

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு சில காரணங்களால் விவாகரத்து செய்தார்.

samantha-gets-money-from-hero-for-her-treatment

தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார், இவருக்கு தற்பொழுது மார்க்கெட் அதிகரித்து கொண்டேபோகிறது. மேலும், இவர் புஷ்பா படத்தில் ஐட்டம் டான்சராக ஆடியது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. இவர் தற்பொழுது ஹாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார், அதில் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார்.

சிகிச்சைக்கு கடன்

இந்நிலையில், இவர் மையோசிடிஸ் என்ற அறியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக கேரளா, மும்பை போன்று பல இடங்களுக்கு சென்று வருகிறார். இவர் சமீபத்தில் நடித்த சாகுந்தலம் படம் நினைத்த வரவேற்பை கொடுக்கவில்லை. பின்னர் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்துள்ளார், அது அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

samantha-gets-money-from-hero-for-her-treatment

தற்பொழுது இவர் சினிமாவிலிருந்து சில காலம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், இவர் பிறப்பில் நடிகர் ஒருவரிடம் தனது சிகிச்சைக்காக 25 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தெலுங்கு மீடியாக்கள் கூறியுள்ளது.

ஆனால் அந்த ஹீரோ நடிகர் யார் என்பது குறித்து கூறவில்லை. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் கடன் வாங்கும் அளவுக்கு சமந்தாவின் நிலைமை ஆகிவிட்டதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.