அந்த நடிகையுடன் காதலை உறுதி செய்த நாகசைதன்யா - தீயாய் பரவும் ஃபோட்டோஸ்!
நாக சைதன்யா பிரபல நடிகையுடன் ட்ரிப் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகர் நாக சைதன்யா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து

கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். 3 ஆண்டுகள் மகிழ்ச்சியாக இவர்கள் மண வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் பிரிவதாக இருவரும் அறிவித்தனர்.
அதன்பின் நடிகை ஷோபிதாவை நாக சைதன்யா காதலிப்பதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தது. நடிகை சோபிதா துலிபாலா இந்தியில் அனுராக் காஷ்சோபித யப் இயக்கிய ராகவ் 2.0 திரைப்படத்தில் அறிமுகமானார்.
டேட்டிங்?
Made in Heaven - வெப் சீரிஸ் மூலம் பிரபலமானார். மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த ‘குருப்’ திரைப்படம் ஹிட் அடித்தது. தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரம் மூலம் அறியப்பட்டார்.
இந்நிலையில், இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் நடிகை சோபிதா காட்டிற்கு சஃபாரி ட்ரிப் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதே போல நாக சைதன்யாவும் தான் காட்டில் இருக்கும் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் ஒன்றாக ட்ரிப் சென்றுள்ளார்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், ஒருமுறை சோபிதாவிடம் இதுகுறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அப்படி எதுவும் தங்களுக்குள் ஒருபோதும் இல்லை என்று தெளிவாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil