மீண்டும் காதலில்.. பெரிய வீட்டு மருமகளாகப்போகும் சமந்தா? தீயாய் பரவும் தகவல்!
சமந்தா காதல் குறித்த புதிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
சமந்தா
நடிகை சமந்தா நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்பு இரண்டு பேருமே பரஸ்பர புரிதலோடு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தொடர்ந்து மையோசிடிஸ் நோய் பாதிப்பால் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் தீவிர சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார். பின் சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது.
இதனையடுத்து தற்போது சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் நடித்துள்ளார். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடித்திருந்தார். இதனையடுத்து மேலும் சில படங்களில் அவர் நடிப்பதற்கு கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
மீண்டும் காதல்?
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகனான நடிகர் அர்ஜுன் கபூரை சமந்தா காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் கவிதை ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த போஸ்ட்டின் கமெண்ட் செக்ஷனில் அர்ஜுன் கபூர்,
'இந்தக் கவிதையின் பிரிண்ட் எனது வீட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் காதல் என பேச ஆரம்பித்துவிட்டனர். இதற்கிடையில் அர்ஜுன் கபூர் சமீபத்தில்தான் நடிகை மலைக்கா அரோராவை பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.