அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா - என்னாச்சு..
ஆட்டோ இம்யூன் எனும் தோல் நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தா
தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. தற்போது பாலிவுட்டிலும் வலம் வர உள்ளார். இந்நிலையி, இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். சமீபமாக புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இதனால் பல வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. அவரது திரைப்படம் குறித்த அப்டேட்டுகளை மட்டும் அவ்வப்போது வெளியிட்டு வந்தார். இவர் நடித்துள்ள யசோதா திரைப்படம் அடுத்த மாதம் 11ம் தேதி வெளியாகவுள்ளது. அதன் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தோல் நோய் பாதிப்பு
தற்போது அவர், பட ட்ரைலருக்கு தந்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘நீங்கள் எப்போதும் எனக்குக் கொடுக்கும் அன்பும் ஆதரவும் மட்டும்தான் வாழ்க்கை எப்போதெல்லாம் எனக்குக் கடினமான சவால்களைத் தருகிறதோ அதிலிருந்து மீளும் கருவியாக அமைந்திருக்கிறது.
— Samantha (@Samanthaprabhu2) October 29, 2022
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் நான் ஆட்டோ இம்யூன் என்றழைக்கப்படும் மயோஸிடிஸ் (Myositis) நோயால் பாதிக்கப்பட்டேன். இது சீக்கிரம் சரியானதும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், நான் நினைத்ததை விடவும் சரியாவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்கிறது.
உருக்கம்
அதீத நம்பிக்கை எதன் மீதும் வைக்கக் கூடாது என்பதை நான் உணர்ந்து வருகிறேன். இந்தப் பாதிப்புடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்பதை நான் ஒத்துக் கொள்ளதான் வேண்டும். நான் முழுமையாக சீக்கிரம் சரியாகிவிடுவேன் என மருத்துவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.
உடல்ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நான் நல்ல நாட்களையும் மோசமான நாட்களையும் எதிர்கொண்டுள்ளேன். இருந்தாலும், இதற்கு மேலும் என்னால் ஒருநாள் கூட நகர்த்த முடியாது என்று தோன்றினாலும் அப்படியே நேரம் நகர்ந்து கொண்டு இருக்கிறது.
சீக்கிரம் நான் குணமடையும் காலம் வரும் என்று நினைக்கிறேன். ஐ லவ் யூ! இதுவும் கடந்து போகும்’ என கூறி குளுக்கோஸ் ஏற்றியபடி டப்பிங் ஸ்டுடியோவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.