இதனால்தான் 2வது கல்யாணம் செஞ்சுக்கல; சமந்தாவின் நச் பதில் - ரசிகர்கள் ஷாக்!

Samantha Marriage
By Sumathi Dec 18, 2023 07:59 AM GMT
Report

2வது திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.

நடிகை சமந்தா

தமிழ், தெலுங்கு என கலக்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவே இருப்பார். பிஸியான நடிப்பிற்கு இடையில் புகைப்படங்கள் வெளியிடாமலும், இணையத்தில் இருந்தும் ஒதுங்கி இருந்தார்.

actress samantha

இதற்கு அவர் உடல்நிலை காரணமாக கூறப்பட்டது. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். சமீபத்தில் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த சமந்தா சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

சாப்பாட்டை விட காமம்தான் முக்கியம்; சமந்தா ஓபன்டாக் - தீயாய் பரவும் வீடியோ

சாப்பாட்டை விட காமம்தான் முக்கியம்; சமந்தா ஓபன்டாக் - தீயாய் பரவும் வீடியோ

2வது திருமணம்?

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர் ஒருவர் இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்கவில்லையா என கேட்டதற்கு, ஸ்டாடிஸ்டிக்ஸ் படி அது மோசமான இன்வெஸ்ட்மென்ட். 2023ஆம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவீதம் 50 சதவீதம்;

இதனால்தான் 2வது கல்யாணம் செஞ்சுக்கல; சமந்தாவின் நச் பதில் - ரசிகர்கள் ஷாக்! | Samantha About Second Marriage Viral

இரண்டாவது திருமணம் செய்தவர்களின் விவாகரத்து 67 சதவீதம்; மூன்றாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து 73 சதவீதம் எனக் குறிப்பிட்டு பதிலளித்துள்ளார். இதன்மூலம் அவர் 2வது திருமணம் செய்துக்கொள்ளும் ஐடியாவிலேயே இல்லை என தெரியவருகிறது.