ரிங்கு சிங்கை கரம் பிடிக்கும் சமாஜ்வாடி எம்.பி - யார் இந்த பிரியா சரோஜ்?
எம்.பி. பிரியா சரோஜ்க்கும் இந்திய வீரர் ரிங்கு சிங்குக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
ரிங்கு சிங்
உத்தரபிரதேசம், மச்லிஷஹர் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சமாஜ்வாடி கட்சியின் பிரியா சரோஜ். இவருக்கும் இந்திய அணி வீரர் ரிங்கு சிங்குக்கும் வரும் ஜூன் 8ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.
தொடர்ந்து நவம்பர் மாதம் 18ம் தேதி இருவருக்கும் வாரணாசியில் திருமணம் நடைபெறவுள்ளது. பிரியா சரோஜின் தந்தை துஃபானி மூன்று முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.
எம்பியுடன் திருமணம்
தற்போது எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார். பிரியா தனது கல்வியை புதுதில்லியில் உள்ள விமானப்படை கோல்டன் ஜூபிலி நிறுவனத்தில் முடித்தார். தொடர்ந்து டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்தார்.
அரசியலில் நுழைவதற்கு முன்பு, அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். ஒரு ஹோட்டல் விருந்தில் வைத்து பிரியா சரோஜ்க்கும், ரிங்கு சிங்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.
சரோஜின் தோழியின் தந்தை கிரிக்கெட் வீரர் தான். அவர் மூலமாகத்தான் பிரியாவுக்கும், ரிங்கு சிங்குக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.