நடுராத்திரியில் கதவை தட்டி.. செத்துடுவேன்; ஐஸ்வர்யா ராயை மிரட்டிய சூப்பர்ஸ்டார்!
ஐஸ்வர்யா ராயை நடிகர் ஒருவர் நடுராத்திரியில் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையில் ஹம் தில் தே சுகே சனம் படத்தில் சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் ஜோடி நடித்தபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது.
ஆனால் காதல் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. சல்மானின் அனுமதி இல்லாமல் எந்த படத்திற்கும் கையெழுத்து போடக்கூடாது, எந்த நடிகருடனும் நெருக்கமாக நடிக்கக்கூடாது என்று பல கண்டிஷன்களை போட்டுள்ளார். இதனால் ஐஸ்வர்யா சல்மான் கானை பார்ப்பதை தவிர்த்துவிட்டு, வீட்டை விட்டு வெளியில் வராமலே பல நாட்கள் வீட்டிற்குள்ளே இருந்துள்ளார்.
சல்மான் நடவடிக்கை
இதனால் சல்மான் ஒரு நாள் நள்ளிரவில் ஐஸ்வர்யா ராயின் வீட்டுக்கு வந்து கதவை தட்டியிருக்கிறார். இப்போது கதவை மட்டும் திறக்கவில்லை என்றால், 17வது மாடியில் இருந்த குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.
பின் சத்தத்தை கேட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டதால், ஐஸ்வர்யா ராய் திறந்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐஸ்வர்யா ராய் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
இதனையடுத்து 2007ல் அபிஷேக் பச்சனை, ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.