மனைவி கர்ப்பமான 4 மாதத்தில் சிறுமி கொழுந்தியாவும் கர்ப்பம் - சிக்கிய வங்கி ஊழியர்!
மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆன்ஸ்ட்ராஜ்(27). இவர் தனியார் வங்கியில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், மனைவியின் தங்கையான பாலிடெக்னிக் மாணவி(16) இவருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதற்கிடையில் அவரது மனைவி கர்ப்பமாகியுள்ளார்.
இளைஞர் கைது
தொடர்ந்து மனைவியின் தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமாகி அதனை வீட்டாரிடம் மறைத்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல உடல் மாற்றம் குறித்து பெற்றோர் வினவியதில் நடந்ததை கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், போலீஸில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆன்ஸ்ட்ராஜ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணமான 6 மாதத்தில் அவரது மனைவி 4 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், மனைவிியின் தங்கயையும் 2 மாத கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.