கொடூரம்; 15வயது சிறுமியை கத்திமுனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 8 பேர்!
சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மீர்பேட் என்ற பகுதியில் 15 வயதுடைய சிறுமியும், அவரது 14 வயதுடைய சகோதரனும் பெற்றோரை இழந்ததால் உறவினர் வீட்டில் குடியேறி தங்கி வந்துள்ளனர். சம்பவத்தின் போது இருவரும் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் வீட்டினுள் இருந்துள்ளனர்.
அப்போது 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைந்துள்ளது. அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். கும்பலில் இருந்த சில பேர் குழந்தைகளை மிரட்டிக் கொண்டிருக்க, மற்ற சில பேர் சிறுமியை மாடிக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இந்நிலையில் ரச்சகொண்டா காவல் ஆணையர் டிஎஸ் சவுகான் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டார். எல்.ஜி.நகர் துணை ஆணையர் பி.சாய்ஸ்ரீ கூறுகையில், "குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டு பாலியல் வன்முறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி சகி மையத்துக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளார். அவருடையை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருடன் குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே முன் விரோதம் இருந்ததா என்ற கோணத்திலும் விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.