அரை நிர்வாணத்துடன் சுற்றும் முகமூடிக் கொள்ளையர்கள் -வெளியான பகீர் சிசிடிவி காட்சி... அச்சத்தில் மக்கள்!
முகமூடிக் கொள்ளையர்கள் டவுசர் மட்டும் அணிந்து அரைநிர்வாணமாகச் சுற்றும் காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சீரகாபாடி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி(65) கடந்த சில தினங்களுக்கு முன் உறவினர் வீட்டுத் திருமணத்துக்குக் கணேசன் சென்றுள்ளார்.
நிகழ்ச்சியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த கணேசன், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.இந்தச் சம்பவம் குறித்து கணேசன் காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் ஆட்டையாம்பட்டி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் ,இந்தக் கொள்ளைச் சம்பவம் போல் சேலம் மாவட்டம் ஆத்தூரில் தங்கவேல் என்பவரது வீட்டில் கொள்ளையடிக்க முகமூடிக் கொள்ளையர்கள் டவுசர் அணிந்து அரைநிர்வாணமாகச் சுற்றியுள்ளனர்.
கொள்ளையர்கள்
அப்போது திடீரென வீட்டில் அலாரம் அடித்ததால் திரும்பிச் சென்றுள்ளனர். மேலும் அங்குச் சிசிடிவி கேமரா இருப்பதையும் கொள்ளையர்கள் பார்த்துஅதிச்சியடைந்தனர்.இது தொடர்பாகக் காட்சிகள் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். டவுசர் மட்டும் அணிந்த கோலத்தில் கொள்ளையர்கள் முகமுடி அணிந்தபடி ஊருக்குள் வந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்பான வீடியோ வெளியாகி பொது மக்களை அதிர்ச்சியடைந்து உள்ளனர்.