வங்கியில் ரூ.20கோடி மதிப்பு நகைகள் கொள்ளை... ஊழியரே ஸ்கெட்ச் போட்டது அம்பலம்!
ஃபெட் பேங்க் கோல்டு லோன்ஸ் வங்கியில், ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு தங்க நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஃபெட் பேங்க்
சென்னை, அரும்பாக்கம் 100 அடி சாலையில் ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் வழங்கும் கிளையான ஃபெட் பேங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலான மக்களுக்கு கோல்டு லோன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பட்டப்பகலில் இன்று 3 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்து கொண்டு வங்கியில் நுழைந்துள்ளனர். மேலும் அங்குள்ள காவலாளிகளையும், ஊழியர்களையும் கட்டிப்போட்டு கத்தி முனையில் மிரட்டியுள்ளனர்.
நகைகள் கொள்ளை
அவர்கள் மீது மயக்க மருந்தையும் தெளித்துள்ளனர். அதனையடுத்து வங்கியில் உள்ள் ரூ.20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் வங்கியின் ஊழியர் முருகன் என்பவர் தனது கூட்டாளிகள் மூளம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.