பெண்களுக்கு ரூ.1000; யாரையோ திருப்திபடுத்த எங்களை பாதிப்பதா? லாரி உரிமையாளர்கள் காட்டம்!
அரசு பெண்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்குவதற்காக லாரி உரிமையாளர்களை வதைப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தம்
சேலம் லாரி உரிமையாளர்கள் சங்க கட்டடத்தில் மாநில தலைவர் தன்ராஜ் தலைமையில், லாரி உரிமையாளர்களின் ஒரு நாள் வேலை நிறுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில், லாரி புக்கிங் ஏஜன்டுகள் சம்மேளனம், புக்கிங் ஏஜன்டுகள் சங்கம், சரக்கு போக்குவரத்தாளர்கள் நலச்சங்கம், பழுது பார்ப்போர் நலச்சங்கம், மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோரிக்கை
அதன்பின் பேசிய தலைவர் தன்ராஜ், லாரிகள் உட்பட அனைத்து ரக வாகனங்களுக்கும் காலாண்டு வரி, 40 சதவீதத்தை திரும்ப பெற வேண்டும். ஆன்லைன் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். ஸ்டிரைக்கால் லாரி உரிமையாளர்களுக்கு, 300 கோடி ரூபாய்க்கு வாடகை இழப்பு ஏற்படுவதோடு, 5,000 கோடி மதிப்புள்ள சரக்குகளின் பரிமாற்றத்தில் முடக்கம் ஏற்படும்.
தீபாவளி பண்டிகை நேரத்தில் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது நோக்கமல்ல, அரசின் கவனத்தை ஈர்க்கவே வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசு இதுவரை அழைத்து பேச்சு நடத்தாததால், ஸ்டிரைக் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சாலையில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை உரிமையாளர் எடுக்காவிட்டால் இதான் நடக்கும் - மேயர் பிரியா அதிரடி!
தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில், 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பதற்காக, வாகனங்களுக்கான வரி உயர்வு, ஆன்லைன் வழக்குப்பதிவு ஆகியவை மேற் கொள்ளப்படுகின்றன. இந்த தொகை எங்கள் வீட்டு பெண்களுக்கு கிடைப்பது இல்லை.
யாரையோ திருப்திபடுத்த, லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அரசு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க முன் வருவதோடு, எங்களை அழைத்து பேச்சு நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.