உறைந்து போன ரயில் பைலட் - தண்டவாளத்தில் இருந்த உருவம் - சேலம் அருகே 20 நிமிடம் நின்ற ரயில்!!
சேலம் எக்ஸ்பிரஸ் திடீரென நடுவழியில் நிறுத்தப்பட்டது குறித்தான விவரங்கள் வெளிவந்துள்ளது.
சேலம் எக்ஸ்பிரஸ்
சென்னையில் இருந்து சேலத்திற்கு விருத்தாச்சலம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றது சேலம் எக்ஸ்பிரஸ். நாள் தோறும் பயணிக்கும் இந்த ரயில் நேற்று திடீரென சேலம் செவ்வாய்பேட்டை அருகே நிறுத்தப்பட்டது.
காலை 6 மணிக்கு சேலம் டவுன் வந்த ரயில், சேலம் ரயில் நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த போது, செவ்வாய்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில், காயங்களுடன் கிடந்துள்ளார்.
45 வயது பெண்
உடனே சாதுரியமாக செயல்பட்ட ரயிலின் பைலட், ரயில் நிறுத்தியிருக்கின்றார். இது தொடர்பான தகவல் சேலம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ், அப்பெண்ணை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் கால் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த நிலையில், மயங்கியிருக்கிறார் என தெரியவந்துள்ளது