ரேசன் அட்டைகளுக்கு இன்று முதல் கிடைக்க போகும் முக்கிய பொருள் - மகிழ்ச்சியில் மக்கள்
கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நேரில் ஆய்வு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் நீலகிரி உருளைக்கிழங்கு கூட்டுறவு சங்கத்தில் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு முறையாக உருளைக்கிழங்குகள் தரம் பிரிக்கப்படுகிறதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கு உருளை கிழங்குகளை தரம் பிரித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுடன் இணைந்து அவரும் அந்த பணியில் ஈடுபட்டார்.
ரேசன் அட்டைகளுக்கு கேழ்வரகு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் உலக அளவில் சிறுதானிய ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
கேழ்வரகு உற்பத்தியை பெருக்கி தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரேசன் கடைகளிலும் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.