ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து
Government of Tamil Nadu
Chennai
By Thahir
கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் மீது சுற்றுலா வாகனம் ஒன்று எதிரே வந்து மோதியதில் காரின் முன பகுதி சேதமடைந்தது.
கார் விபத்து
சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது.
இந்த விபத்தில் ராதாகிருஷ்ணன் காயங்கள் எதுவும் இன்றி உயிர்தப்பினார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மெரினா காவல்நிலையம் இருந்தும் போக்குவரத்து போலீசார் அங்கு இல்லை என புகார் எழுந்துள்ளது.