ரயில் ஓட்டும் லோகோ பைலட் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கஷ்டமா?

Indian Railways Railways
By Sumathi May 20, 2024 10:34 AM GMT
Report

ரயில் ஓட்டும் லோகோ பைலட்டின் சம்பளம் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

லோகோ பைலட்

லோகோ பைலட் என்பவர் ரயில்களை ஓட்டுபவர். இந்திய ரயில்வே முதலில் அசிஸ்டெண்ட் லோகோ பைலட்களை நியமிக்கிறார்கள். இதற்காக தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

loco pilot

அசிஸ்டெண்ட் லோகோ பைலட்டாக சேரும் நபர் அனுபவம் பெற்ற பின்னர் பதவி உயர்வு மூலம் லோகோ பைலட்டாக மாறலாம். இதற்காக ஆள்சேர்ப்பு வாரியம் (railway recruitment board) தேர்வுகள் நடத்தும். குறிப்பிட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நடுவானில் விமான இன்ஜினை அணைக்க முயன்ற பைலட் - குலை நடுங்கிய பயணிகள்!

நடுவானில் விமான இன்ஜினை அணைக்க முயன்ற பைலட் - குலை நடுங்கிய பயணிகள்!

சம்பள தகவல்

உதவி லோகோ பைலட் பதவிகளுக்கு டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இரண்டு நிலைகளிலும் கணினி அடிப்படையிலான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கான தொடக்க அடிப்படை ஊதியம் ரூ.19,900 ஆக இருக்கும்.

ரயில் ஓட்டும் லோகோ பைலட் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கஷ்டமா? | Salary Of A Train Driving Loco Pilot Details

இதனுடன், வீட்டு வாடகை கொடுப்பனவு, அகவிலைப்படி, போக்குவரத்து கொடுப்பனவு போன்ற சலுகைகளும் வழங்கப்படும். லோகோ பைலட்டுகள் வாரத்தில் குறைந்தது 36 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். அதற்கு மேல் வேலை செய்தால் ஓவர் டைம் அலவன்ஸ் என்ற கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.